technology

img

நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் 'ரியல்மீ கியூ3 ஐ' ஸ்மார்ட்போன் 

ரியல்மீ நிறுவனம் தன்னுடைய  புதிய தயாரிப்பான 'ரியல்மீ கியூ ஐ' ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளது. 

ரியல்மீ வரிசையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன், 6.5 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை,  700 மீடியாடெக் டைமன்சிட்டி, 4 ஜிபி உள்ளக நினைவகம், 128 ஜிபி கூடுதல் நினைவகம், பின்பக்கம் 48 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும், 2 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. 

மேலும், முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது. 5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி, ஆன்டிராய்டு 11 ஒஎஸ், டைப்-சி போர்ட் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் இந்திய விற்பனை விலை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

;